×

திமுக வேட்பாளர் ரமேஷ் இறுதிக்கட்ட பிரசாரம்

கடலூர், ஏப். 17: கடலூரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தை திமுக வேட்பாளர் ரமேஷ் நிறைவு செய்தார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குவிந்தனர். கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷ் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தார். கடலூரில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் துவங்கிய பிரசாரம் நேதாஜி சாலை, பாரதி சாலை புதுநகர், முதுநகர், வண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணியாக சென்று லாரன்ஸ் சாலையில் நிறைவு பெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, திராவிடர் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுநல அமைப்புகள், கூட்டணி கட்சியினர் என பிரசாரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எழுச்சிப் பேரணியாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டனர். லாரன்ஸ் சாலையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில தேர்தல் பணிக்குழு புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நிர்வாகிகள் மாணவரணி நடராஜன், அகஸ்டின், இளைஞரணி சுந்தர், பாலாஜி, மீனவர் அணி தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தென்னம்பாக்கம் மகேஷ், பன்னாட்டு திமுக பொருளாளர் மஸ்கட் புகழேந்தி, நிர்வாகிகள் கோவலன் சுந்தரமூர்த்தி, சலீம், தொமுச பழனிவேல், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ராமலிங்கம், காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், நிர்வாகிகள் கோபால், மீனவரணி கார்த்திகேயன், ராமராஜ், காமராஜ், வேலுமணி, குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வன், நிர்வாகிகள் புதியவன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆனந்த், செந்தில், சங்கர், அருள், மதிமுக ராமலிங்கம், ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் குளோப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாதவன், அமர்நாத் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர் ரமேஷ் கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் அனைத்து அடிப்படை தேவைகளும் நாடாளுமன்றத்தில் குரலாக ஒலித்து இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற தொகுதியாக திகழும் என சூளுரைத்தார்.

Tags : Ramesh ,DMK ,
× RELATED நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி